மீரா மிதுனுக்கு உதவி…! சிக்க போகும் பெண் பிரபலம்..?
சென்னை: நடிகை மீரா மிதுனுக்கு உதவியதாக அவரது பெண் தோழியும், பிரபலமானவருமான ஒருவரை நோக்கி போலீசார் நகர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாடலிங்கில் வலம் வந்த மீரா மிதுன் அப்படியே சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். பின்னர் பிக்பாசில் நுழைந்து பிரபலமாகி முன்னணி நடிகர்கள் பற்றி பேசி பல சர்ச்சைகளுடன் வலம் வந்தார்.
இப்போது லேட்டஸ்டாக பட்டியலினத்தவர்களை பற்றி விமர்சித்து கைதாகி சிறையில் இருக்கிறார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இஷ்டம் போல பேசுவதால் மீரா மிதுனுக்கு மனநல சிகிச்சையும் அளிக்க காவல்துறை தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மீரா மிதுன் வீடியோக்களை படம்பிடித்து வெளியிட்டதற்காக அவரது காதலராக அறியப்படும் அபிஷேக் ஷாம் என்பவரையும் போலீஸ் பிடித்து உள்ளே வைத்திருக்கிறது.
இப்போது லேட்டஸ்ட்டாக மீரா மிதுனின் பிரபல பெண் தோழி ஒருவரை பற்றிய தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது அவரது போதை பழக்கம், வழக்குகளில் இருந்தும், மோசடிகளில் இருந்தும் தப்பிக்கவும், உதவியதாகவும பிரபல பெண் தோழி ஒருவர் இருப்பதை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
விரைவில் அந்த பெண் பிரபலமும் காவல்துறை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவரை பற்றிய ஒரு பெரிய பட்டியலே காவல்துறை வசம் உள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் ஜரூராக தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன.