ஸ்டாலினிடம் மகேந்திரன் வைத்த டிமாண்ட்…? ‘ஷாக்’கில் திமுக…!
சென்னை: திமுகவில் சேர்ந்த வேகத்தில் மகேந்திரன் வைத்துள்ள டிமாண்ட் பற்றி தான் இப்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை திமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் குழப்பம் ஆரம்பித்த முதல் கட்சியாக இருந்தது மக்கள் நீதி மய்யம். தலைமையின் நடவடிக்கையில் ஜனநாயகம் இல்லை என்று குரலுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் மகேந்திரன். அவருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் மநீமவில் இருந்து கழன்று கொண்டனர்.
திடீர் திருப்பமாக மகேந்திரன் 11 ஆயிரம் தொண்டர்கள் கொண்ட பட்டியல் ஆதாரங்களோடு திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். தேர்தலுக்கு முன்னால் அவர் கட்சியில் இணைந்திருந்தால் கோவையில் பெரிய வெற்றியை பெற்று இருக்கு முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கூற… கோவை திமுகவினர் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் இன்னமும் வெளியாகி கொண்டிருக்கிறது.
இப்போது… அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஸ்டாலினிடம் மகேந்திரன் வைத்துள்ள டிமாண்ட் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உடன்பிறப்புகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அதாவது கோவை மேயர் வேட்பாளர் பதவியை கேட்டு ஸ்டாலினிடம் மகேந்திரன் பேசியிருப்பதாக ஒரு தகவல் பரவி கிடக்கிறது.
இந்த தகவலை கேட்டு ஏற்கனவே இந்த பதவிக்கு காய் நகர்த்தி கொண்டு இருக்கும் பலரும் திகிலடைந்து போயிருக்கின்றனர். மகேந்திரன் டிமாண்ட் எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது போக போக தெரியும். ஆனால் இப்போது மகேந்திரன் கட்சிக்குள் இணைந்திருப்பது குறித்து கோவை திமுகவினர் செம அதிருப்தியில் இருக்கின்றனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் ஒருவேளை அவர் ஜெயித்திருந்தால் திமுகவில் சேர்ந்திருப்பாரா..? இதற்கு முன்னர் எந்த மக்கள் பிரநிதித்துவ பதவிகளை அலங்கரிக்காத அவர் மேயர் வேட்பாளர் பதவி கேட்டுள்ளாரா? என்று குரல்களை உ.பி.க்கள் எழுப்பி வருகின்றனர். கோவை திமுக மட்டத்தில் உலா வரும் இந்த தகவல்கள் எந்தளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை. ஆனால், மகேந்திரனின் இணைப்பு, கோவை மாவட்ட திமுகவுக்குள் பெருத்த விவாதங்களை எழுப்பி இருக்கிறது மட்டும் என்பது உண்மை…!