Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

ரஜினியின் 170…! வெளியான சூப்பர் தகவல்


சென்னை: ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கும் டைரக்டர் என்று ஒரு தகவல் கோலிவுட்டை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி எதுவாக இருந்தாலும் அது அவரை போலவே மாஸ்தான். அப்படி ஒரு தகவல் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது. ரஜினி தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் படு பிசியாக உள்ளார். சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், டைரக்டர் நெல்சன் திலீப்குமார் என்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஜெயிலர் பற்றி புதுப்புது தகவல்கள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வரும் வேளையில் ஒரு புதிய தகவல் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

ஜெயிலர் படத்துக்கு பின்னர் அவரின் 170வது படத்தை யார் இயக்குவது என்பது தான். டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட டைரக்டர் தேசிங்கு பெரியசாமி ஆகிய 2 பேரில் ஒருவர் தான் என்று பரவலாக பேசப்பட்டது.

இதில் தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் தமது அடுத்த படம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருந்தார். இந் நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளி வந்து இருக்கின்றன.

லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை மற்றும் ஷூட்டிங்குக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதும் கூடுதல் தகவல்.

Most Popular