ஆத்தாடி…! 1500 கிலோ குட்கா பதுக்கல்…! சிக்கிய பாஜக முக்கிய நிர்வாகி
சேலம்: 1500 கிலோ குட்கா பதுக்கி வைத்ததாக சேலம் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 மாதங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கல், விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
18 வயது குறைந்தவர்களுக்கு, இளைஞர்களுக்கு விற்பனை செய்தால் ஜாமீனில் வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், சேலத்தில் குட்கா பதுக்கிய பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ளவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகியாக இருப்பவர்.
தம்மம்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் 1500 கிலோ குட்கா பொருட்களை அவர் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சேலம் பாஜக பிரமுகர் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு அதன் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.