வேற லெவலில்… கொரோனா 3வது அலை…! நிபுணர்களின் ‘ஷாக்’ தகவல்
இந்தியாவில் கொரோனா 3வது அலையின் பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்னமும் கொரோனாவின் 2வது அலை பாதிப்பு குறித்த விவாதங்களே முற்று பெறவில்லை. ஆனால் 3வது அலை பற்றிய தகவல்கள் அனைத்து தரப்பில் இருந்தும் வெளியாகி பெரும் அதிர்ச்சி அளித்து வருகின்றன.
கொரோனா அலையை கட்டுப்படுத்த மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளும் படு வேகமாக முன் எடுக்கப்பட்டு வருகின்றன
அதே நேரத்தில் கொரோனா 3வது அலையானது ஆகஸ்ட் கடைசியில் தொடங்கி அக்டோபர், நவம்பர் மாதங்களில் படு உச்சம் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு முதல் அலை, தற்போது உள்ள 2ம் அலை… இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு 3வது அலை இருக்குமாம். இதுவரை பாதிப்பு ஏற்படாத இடங்களில் சேதாரம் அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க… சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதே சரியான ஒன்று என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 3வது அலையில் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்ற பேச்சுகளும் அனைத்து தரப்பில் இருந்தும் எழ ஆரம்பித்து உள்ளது.