அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்..! அதிமுக வாக்குறுதி
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க் ஏற்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்.
தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத் தொகை ரூ.6000 ஆக உயர்த்தப்படும்.
கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.
சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும்.
நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி.
ஆட்சிக்கு மீண்டும் வந்த உடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.