HEAT STROKE… ஹாஸ்பிடலில் அட்மிட்..! ரசிகர்கள் பதற்றம்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஐபிஎல் என்றால் ஷாரூக்கானும் நினைவுக்கு வந்து செல்வார். கேகேஆர் அணியின் இணை உரிமையாளரான ஷாரூக், தமது அணி ஆடிய பிளே ஆப் மேட்ச்சை காண குடும்பத்துடன் நேரில் சென்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இப்படிப்பட்ட நிலையில் ஷாரூக்கிற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அவர் அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு heat stroke எனப்படும் வெயில் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஷாரூக் மருத்துவமனையில் உள்ள விவரம் அறிந்த அவரது நெருங்கிய நண்பர் ஜூகி சாவ்லா, நேரில் சென்று பார்த்துள்ளார்.
மருத்துவர்கள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய ஷாரூக், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.