Sunday, May 04 11:53 am

Breaking News

Trending News :

no image

அந்த வாகனம்..! ஓ பன்னீர்செல்வத்துக்கு ஈபிஎஸ் காட்டிய சிக்னல்…!


சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்ள தமது இல்லத்தில் இருந்து ஈபிஎஸ் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டார்.

அதிமுகவுக்கும், அக்கட்சியினருக்கும் இன்றைய தினம் மிக முக்கியமான நாளாக இருக்கிறது. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா என்பது நீதிமன்றம் கையில் உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கு அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இருக்கிறார்.

ஆனால் அவர் பயன்படுத்திய வாகனம் தான் இப்போது பலரின் ஆச்சரியத்தையும் உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த முறை அவர் பிரச்சார வாகனத்தில் தொண்டர்களின் வரவேற்பு மற்றும் முழக்கங்களுக்கு இடையே வந்து கொண்டிருக்கிறார்.

கிரீன்வேய்ஸ் சாலை முதல் வானகரம் மண்டபம் வரை அனைத்து இடங்களிலும் வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். மலர்களும், வாழ்த்து முழக்கங்களுடன் ஏக வரவேற்புடன் அவர் வந்து கொண்டு இருக்கிறார்.

கடந்த முறை காரில் வந்த ஈபிஎஸ், இந்த முறை பிரச்சார வாகனத்தில் உலா வருவது நிச்சயம் தாம் நினைத்ததை அடைந்துவிட்டதை அவர் எண்ணுவது போன்று உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular