30 ஆயிரம் பேருக்கு ‘ஜாக்பாட்’…! பிளஸ் 1 பெயில்… ஆனா… பிளஸ் 2ல் பாஸ்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பெயிலான மாணவர்கள் 30 ஆயிரம் பேர் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் பிளஸ் 2 தேர்வில் பாஸாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது இந்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் பிளஸ் 1 பெயிலான மாணவர்கள், 30 ஆயிரம் பேர் பிளஸ் 2 தேர்வில் பாஸாகின்றனர்.
இது எப்படி சாத்தியம் என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்… 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 1 வகுப்பை பொறுத்தவரை… கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் பிளஸ் 1 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மார்க் தரப்பட்டது.
அப்போது தான் ஒரு விஷயம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அதாவது இந்தாண்டில் பிளஸ் 2 முடித்த 8.5 லட்சம் மாணவர்களில் 30 ஆயிரம் பேர் பிளஸ் 1 வகுப்பு சில பாடங்களில் பெயிலாகி உள்ளனர். இந்த மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பில் ஆல் பாசானாலும் பிளஸ் 1ம் வகுப்பு அரியர் தேர்வை எழுதியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர், மதிப்பெண் குழுவினர் தரப்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள மதிப்பெண் வழிகாட்டல் முறைகளில் அது பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்களில் யாரேனும், பிளஸ் 1ல் பாசாகாவிட்டாலும் அல்லது தேர்வை எழுதாமல் விட்டிருந்தாலோ அவர்களுக்கு பாஸ் மார்க்காக 35 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 30 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 1ல் பெயில் ஆனால் 35 மதிப்பெண்களுடன் பிளஸ் 2ல் பாசாகி, உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெறுவர்.