இந்தியா தோத்துடுச்சே…! கதறி அழுத பிரபல டைரக்டர்…! காய்ச்சிய நெட்டிசன்ஸ்
சென்னை; உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா தோற்றதை சினிமா இயக்குநர் செல்வராகவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.
உலக கோப்பை கனவுடன் இருந்த இந்திய அணி பைனலில் தோற்று போக அதன் அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னமும் மீளவில்லை. ஆனாலும் பல்வேறு பிரபலங்களும் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளார். தமது வருத்தத்தையும், வேதனையையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம்.
அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது என்று கதறி உள்ளார்.
தமது சோகம் அனைவரையும் பரிதாபம் கொள்ள வைக்கும் என்று நினைத்த செல்வராகவனுக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்துள்ளது. அவரின் இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள், உண்டு இல்லை கருத்துக்களை பதிவிட்டு அலற வைத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறி உள்ள வார்த்தைகள்:
*ஆமா ஆமா ..ஜெய் சீரகசம்பான்னு கத்த முடியாம மனசுக்குள்ளேயே அழுத அந்த வலி இருக்கே..
*மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி போராடி கண்ணீர் வடித்து கதறிய போது பதறாத அந்த பாழாப் போன மனசு நேத்து பதறியிருக்கு பாருங்களேன். தேஷ்பக்தி.
*சார் நாடு ஒரு பத்து வருஷமாவே தோத்துகிட்டு தான் சார் இருக்கு. அவ்வளவு ஏன் உ.பில 3 நாளா 41 பேரு ஒரு டணல்ல மாட்டிகிட்டு வெளியில வர முடியாம தவிக்கிறாங்க, அது எல்லாமே தோல்விதான். அதுக்கெல்லாம் வேற யாரோ அழுதுக்குவாங்கல்ல சார்.
*விளையாட்டில் தோற்பதற்கு ஏன் அழவேண்டும்? மணிப்பூரில் இந்தியா தோற்றபோது அழுகை வரலியா செல்வா?
*இந்தியர்களுக்கு எந்த தீங்கு நடந்தாலும் அப்போது வராத வலி, கிரிக்கெட் மேட்ச்ல தோத்ததுக்கு வருதுன்னா, அதுக்குபேரு என்ன
*ஒரு தடவையாவது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லையே அழுதீங்களா @selvaraghavan Sir
*டேய்... மணிப்பூர் கலவரத்துக்கு எத்தனை நாள் கண்ணீர் விட்டு இந்தியாவிலே நடக்கிற அக்கிரமங்களுக்கு எத்தனை நாள் கண்ணீர்விட்டே காமெடி பண்ணாமே போடா