ரெடியா…? திறக்கப்படும் பள்ளிகள்…! முக்கிய உத்தரவை வெளியிட்ட பள்ளிக்கல்வி துறை…!
சென்னை: கொரோனா சிகிச்சை முகாம்களுக்காக பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளிக்கல்வித் துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
எப்போது… எப்படி இந்த கொரோனா பிரச்சனை தீரும் என்று தெரிகிறது. நாட்கள் நகர, நகர பாதிப்புகளும், உயிரிழப்புகளும் வேகமாக நகர ஆரம்பித்து உள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும் 31, 892 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக 288 பேர் ஒரே நாளில் உயிரை பறிகொடுத்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலையில், பள்ளிகளை கொரோனா சிகிச்சை அளிக்கும் முகாம்களாக மாற்றும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை இறங்கி இருக்கிறது.
இதற்காக, பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் உள்ள தலைநகர் சென்னையில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே எந்த நேரத்திலும பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறி உள்ளது. கொரோனா தொற்றின் பரவல் குறைந்த பின்னர், சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு, பள்ளிகள் ஒப்படைக்கப்படும்.