Sunday, May 04 12:41 pm

Breaking News

Trending News :

no image

தமிழ்நாட்டில் 150 பாஜக எம்எல்ஏக்கள்…! 'அசால்ட்' அண்ணாமலை


ஈரோடு: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் 150 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு அவர் இன்று சென்றார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்ய தான் கட்சி என்னை தலைவராக நியமித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை சட்டசபைக்குள் நுழைவது சிரமம்.

இப்போது 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் வருங்காலத்தில் தமிழகம் பாஜகவின் காலமாக அமையும். கட்சியின் கொள்கைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் ஈரோட்டில் அதிகம் பேர் உள்ளதால் கட்சி அதிகம் வளர்ச்சி இருக்கும்.

எல்லாரையும் ஒருங்கிணைத்து குழுவாக செயல்படுவது தான் எனது முதல் வேலை. அப்படி செயல்பட்டால் பாஜகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்த முடியும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 150 எம்எல்ஏக்கள் நமக்கு இருப்பார்கள்.

கிராமங்களில் பாஜகவை கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம். பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர் பேசினார்.

Most Popular