Sunday, May 04 12:21 pm

Breaking News

Trending News :

no image

இந்தியாவில் இருக்காதீங்க..! ஆப்கானிஸ்தான் போங்க…! பாஜக எம்எல்ஏ சர்ச்சை


இந்தியா வாழ்வதற்கு உங்களுக்கு பயமாக இருந்தால் ஆப்கானிஸ்தான் போய்விடுங்கள் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி உள்ளது சர்ச்சையில் கொண்டு போய் விட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தானில் அரசியல் நிலவரங்கள் மாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளன. அந்நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் தாலிபான்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளதால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் அந்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு போக முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவும் ஆப்கானிஸ்தான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எல்லோரும் ஆப்கானிஸ்தான் போங்க என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

அப்படி பேசிய பாஜக எம்எல்ஏ பெயர் ஹரிபூஷன் தாக்கூர் பச்சால். பீகார் மாநிலத்தில் உள்ள பிஸ்பி தொகுதியின் எம்எல்ஏ. செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தான் இப்படி கூறி இருக்கிறார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: ஆப்கானிஸ்தான் நிலவரம் இந்தியாவை பாதிக்காது. அந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல வேறு எங்கும் தருவது கிடையாது.

இந்தியாவில் வசிக்க பயப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் போகலாம். அங்கே போனால்தான் இந்தியாவின் மகிமை எல்லாருக்கும் தெரியும். ஆப்கானிஸ்தானில் அநீதி நடந்துள்ளது என்று கூறி உள்ளார்.

Most Popular