ரஜினியை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர்… திடீர் மரணம்
சென்னை: பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 83.
தென்னிந்திய திரையுலகின் ஜாம்பவான் ஆகவும், பிரபல சண்டை பயிற்சி இயக்குநராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். தமிழ், மலையாயம், கன்னடம், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி இயக்குநராக இருந்தவர். ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் இவரின் சண்டை காட்சிகள் இன்றும் பிரபலம்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சியவர், 2019ம் ஆண்டு கலைமாமணி விருதை பெற்றவர். அண்மைக்காலமாக சொந்த ஊரான குடியாத்ததில் உள்ள தமது இல்லத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் காலமானார்.
சினிமாவில் பல கட்டங்களை கடந்த அவர், இயக்குநர் சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசிப்படம்.
சூப்பர் சுப்பராயன், ராம்போ ராஜ்குமார், விக்ரம் தர்மா என பல ஸ்டண்ட் மாஸ்டர்களை உருவாக்கியவர். ஜூடோ ரத்தினம் மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.