திமுகவை ‘செஞ்சுவிட்ட’ பாஜக…! அந்த ஸ்டைல் தான்…! வைரல் வீடியோ
சென்னை: திமுகவை கிண்டலடித்து வெளியான வீடியோக்கள் எத்தனையோ இருந்தாலும், பாஜக வெளியிட்டு உள்ள லேட்டஸ்ட் வீடியோ தான் இப்போது வைரல்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. கட்சி நிர்வாகிகள் சந்தித்பு, பூத் கமிட்டி, வாக்காளர் பட்டியல் என மும்முரமாக தொண்டர்கள் களம் இறங்கி உள்ளன.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் களத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்க, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கனஜோராக கொண்டாடப்பட்டது.
அமைச்சர் மட்டும் அல்ல, துணை முதலமைச்சர் என்ற லெவலுக்கு கட்சியினர் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இதுபுறம் பக்கம் இருக்க, திமுகவை சதா சர்வ காலமும் சீண்டிக் கொண்டே தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறி வரும் பாஜக, நேற்று தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
திருவிளையாடல் படத்தில் வரும் தருமி பட காட்சிகள் வசனங்கள் உல்டா செய்து, திமுகவை செஞ்சுவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 54 விநாடிகள் தான் டப்பிங் வீடியோ என்றாலும் வேற லெவலில் இருக்கிறது என்கின்றனர் அதை பார்க்கும் பாஜக ஆதரவாளர்கள்.
அதே நேரத்தில் நாங்கள் வீடியோவுக்கு அசராதவர்கள் அல்ல… கப்பித்தனமாக பேசிகிட்டு என்று வடிவேலு ஸ்டைலில் திமுகவினர் கதைப்பது தனி ரகம்….!
அந்த வைரல் வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டுள்ளது.