Sunday, May 04 01:01 pm

Breaking News

Trending News :

no image

மனைவி சங்கீதாவை ஏமாற்றிய நடிகர் விஜய்…! வீடியோவை தெறிக்கவிட்ட ரசிகர்கள்


சென்னை: சொகுசு கார் வரி சர்ச்சை இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தமது மனைவி சங்கீதா பற்றி பேசும் வீடியோ ஒன்றை இணையத்தில் ரசிகர்கள் தெறிக்க விட்டு உள்ளனர்.

பீஸ்ட் பட குஷியில் இருந்து நடிகர் விஜய் ரசிகர்கள் இன்னமும் வெளிவர வில்லை. அதற்குள் சொகுசு கார் பிரச்னை விஜய்யை பாடாய்படுத்தி வருகிறது. ரோல்ய் ராய்ஸ் கார், அந்த காருக்கு வரி என்று தொடர் சர்ச்சைகள் இருந்தாலும் அவரது ரசிகர்கள் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளனர்.

மொத்தம் 23 விநாடிகள் தான் அந்த காணொளி ஓடுகிறது. அது…. ஒரு டைனிங் டேபிள்… நடிகர் விஜய் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அப்போது அவர் பேசும் ஒரு விஷயம் அந்த வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

இந்த காட்சி அண்மையில் ஏதோ ஓரு பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது. அவர் அந்த வீடியோவில் கூறி இருப்பதாவது:

எனக்கு அசைவம் தாங்க, பொதுவாகவே பிடிக்கும். ஆனால் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை சைவம்தான் பண்ணணும்னு வீட்டில் ஒரு ரூல்ஸ் போட்டாங்க. ஆனால் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசைவம் சாப்பிட்டுவிடுவேன் என்று படு ஜாலியாக பேசுவதாக அந்த வீடியோ முடிகிறது.

கார், வரி என சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும்… விஜய் ரசிகர்கள் எதை பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Most Popular