தலைவர் 171… முக்கிய ரோலில் என்ட்ரியாகும் SK
சென்னை: ரஜினிகாந்தின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு பரபர செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வேற லெவல் ஹிட்டடிக்க, இளம் இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
பெயரிடப்படாத அந்த படத்துக்கு தலைவர் 171 என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்ற ஒரு தகவல் ஏற்கனவே வட்டமடித்து வருகிறது.
இப்போது, கூடுதலாக சிவகார்த்திகேயன் பெயரும் அடிபட, ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். வெகு விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.