சட்டசபையில் சொன்னதை செய்து காட்டிய எடப்பாடி…! அரசாணையும் வெளியீடு…!
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்வது குறித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இது குறித்து கடந்த 5ம் தேதி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: உணர்வுப்பூர்வமான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பல வழிகளில் வழக்குகள் பதியப்பட்டன.
ஆனாலும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அப்போது அரங்கேறின. வழக்கிற்குள் உணர்வுபூர்வமான போராடிய மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதால் சில வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளை சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று அரசு தரப்பில் திரும்ப பெறப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இந் நிலையில் சட்டசபையில் அறிவித்தது போன்று, இப்போது வழக்குகள் ரத்து தொடர்பான அரசாணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.