அந்த 6 மணி நேரம்….! அலர்ட்டா இருக்கணும்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாலும், வடகிழக்கு பருவகாலத்தின் எதிரொலியாகவும், மழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
சென்னையில் மழைநீரால் மக்கள் அவதி என்று எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் புகார் பட்டியலை வாசிக்க, அதெல்லாம் நஹி என்று தமிழக அரசும் விளக்கம் கொடுத்து வீடியோவும் வெளியிட்டு வருகிறது.
இந் நிலையில், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் கனமழை தான் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டு உள்ள பட்டியல்;
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
செங்கல்பட்டு
திருவாரூர்
தஞ்சை
கடலூர்
நாகை
மயிலாடுதுறை
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறும அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.