நான் செத்து பொழைச்சவன்…! மக்கள் முன்பு திமுக மூத்த அமைச்சர் 'மாஸ்'
வேலூர்: கொரோனா தடுப்பூசியால் நான் உயிர் பிழைத்தேன் என்று நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி சென்று சேரவில்லை.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் இளைஞர்கள் ஆர்வமுடன் ஊசி போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிர் பிழைத்ததாக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறி இருக்கிறார். வேலூரில் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கவிழா மற்றும் தடுப்பூசி முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
துரைமுருகன் மேலும் தெரிவித்து உள்ளதாவது: அரசாங்கம் தரும் இலவச தடுப்பூயி போட்டுக் கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அச்சம் கூடாது. தடுப்பூசியால் கொரோனாவை முழுமையாக அழிக்க முடியும்.
நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன், அதனால் எதிர்ப்பு சக்தி கிடைத்து உயிர் பிழைச்சேன். தடுப்பூசியால் வைரஸ் என்னை தாக்கவில்லை என்று கூறினார்.