குழந்தைகளே பத்திரம்…! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள, ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை சற்றே குறைய தொடங்கி உள்ள நிலையில், 3வது அலை குழந்தைகளை தாக்கும் என்று தகவல்கள் உலா வருகின்றன. இந் நிலையில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், ஐசிய படுக்கைகள் தயாராக வைத்து இருக்க வேண்டும். சுழற்சி முறையில் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகள் பிரிவில் செவிலியர்களை அவரச கால பணியில் ஈடுபடுத்த வேண்டும். பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களை தயார்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.