பிரபல நடிகரை வளைத்து தாமரைக்குள் போட்ட பாஜக…!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று பாஜகவில் தம்மை இணைத்து கொண்டுள்ளார்.
எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுகவில் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அமமுகவுக்கு தாவினார். இப்போது அங்கிருந்து பாஜகவுக்கு மாறி இருக்கிறார்.
சென்னையில் அக்கட்சி தலைவர் எல் முருகனை சந்தித்து அதிகாரப் பூர்வமாக தம்மை இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் விரைவில் பாஜக கால் ஊன்றும் என்றும் பாஜகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.