ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா…? கட்டாயம் இதை தெரிஞ்சுக்குங்க…
சென்னை: ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் நவ.3ம் தேதி முதல் 10ம் தேதி வரை செயல்பட்டன. விடுமுறை இல்லாமல் இயங்கியதால் எப்போது விடுமுறை என கேள்வி எழுந்தது.
இந் நிலையில், நவம்பர் 25ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என்றும் அன்றைய தினம் விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே அதற்கு முன்பாக, பயனாளிகள் வாய்ப்பை பயன்படுத்தி, பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறது.
முன்னதாக நவம்பர் 13ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.