நீங்க தமிழக அரசு ஊழியரா..? ஸ்வீட் எடுங்க… சூப்பர் அறிவிப்பு 'வெயிட்டிங்'..!
சென்னை: அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2003ம் ஆண்டுக்கு பின் அரசு வேலையில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. குடும்ப ஓய்வூதியம் கிடையாது உள்ளிட்ட அம்சங்கள் அந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்தன.
இந்த ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு வருகின்றனர். கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதோடு கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இந் நிலையில், இப்போது பதவி ஏற்று இருக்கும் திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்டு உள்ள குழு தமது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
குழு அறிக்கை அளித்து இருந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கை அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கும் என்று கூறப்படுகிறது. வெகு விரைவில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை தமிழக அரசு வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.