ஜெயிலர் படத்தை மிஸ் செய்த பிரபல ஹீரோ…! ரசிகர்கள் சோகம்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பற்றி தான் இப்போது கோலிவுட்டில் பேச்சு. திரும்பிய பக்கம் எல்லாம் ஜெயிலர் என்ன படம், யார் யார் படத்தில் உள்ளனர் என டிசைன், டிசைனாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதில் லேட்டஸ்டாக ஒரு விஷயம் எல்லா பக்கமும் பரவி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. தொடக்கத்தில் இதற்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் ஏதோ அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டை வலம் வருகிறது.
ரஜினியின் ஆஸ்தான ரசிகரான சிவகார்த்திகேயன் ஏன் இப்படி செய்தார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனராம். கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக புலம்பல்களும் கேட்கின்றன.
சரி… அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த மண்டை காய்ந்து கடைசியாக ஜெய்யை டிக் அடித்து வைத்திருக்கிறாராம் இயக்குநர். அவரும் ஒகே சொல்லிவிட்டதாக தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகம் என்கிறது படக்குழு.