Sunday, May 04 12:25 pm

Breaking News

Trending News :

no image

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனாவுக்கு பலி…!


சென்னை: சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க பலரும் உயிரிழநது வருகின்றனர். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு இலக்காகி உயிரை இழந்து வருகின்றனர்.

இந் நிலையில், சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு, மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியவர். சென்னையில் உள்ள முகப்பேர் ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இது தவிர பல்வேறு ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொண்டு வந்தார்.

Most Popular