சீமானுக்கு நேர்ந்த திடீர் துயரம்…! அதிர்ந்த தமிழக அரசியல் கட்சிகள்…!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன் காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். தொடக்கத்தில் சினிமா துறையில் இருந்த அவர் இப்போது அரசியல் களத்தில் கழகங்களை எதிர்த்து களமாடி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாக நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று 3ம் இடம்பிடித்ததது.
இந் நிலையில் நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று பிற்பகல் காலமானார். இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
தமது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், அரணையூரில் உள்ள வீட்டில் தந்தை இறந்துள்ளார். சீமானின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக இயக்கங்கள், பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.