146 ஆண்டு சாதனை காலி…! அதான்டா விராட் கோலி
கிரிக்கெட் உலகில் யாரும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆஹா.. சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறார் விராட் கோலி.
கோலிக்கு சாதனைகள் என்பது புதிதல்ல… தமது சாதனையை முறியடிக்கும் திறமையை பெற்றவர் அவர் என்று ஜாம்பவான் சச்சின் வாயினாலே பாராட்டு பெற்றவர்.
அப்பேர்ப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரனான கோலி, புதிய சாதனையை படைத்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோற்று போனது.
அந்த ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் கோலி 76 ரன்கள் குவித்தார். இதன் மூலம் புதிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது, 146 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றின் புதிய சாதனையாகும். இதன்மூலம் இந்த ஆண்டில் மொத்தம் 2006 ரன்களை எடுத்துள்ளார்.
இதேபோன்று இதற்கு முன்பாக 6 முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை அவர் கடந்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஒருவர் தமது விளையாட்டு காலத்தில் அதுவும் ஓராண்டில் 7 முறை 2000 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.
146 ஆண்டு வரலாற்றை பெற்ற கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற ஒரு சாதனையை எந்த வீரரும் நிகழ்த்தியது இல்லை. இதையறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.