16 மாவட்ட மக்களே…. 3 நாள் கவனமாக இருங்க…! நடக்க போகும் விஷயம்
சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்தே தமிழகம் பரவலான மழையை எதிர்கொண்டது. கடந்த வாரத்தில் போதிய அளவு மழை பதிவாக நிலையில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் மழை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினம் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.