பஸ் முன்னாடி ‘படுத்து’… அந்த கோரிக்கை இருக்கே… யப்பா..! குடிமகன் ‘குசும்பு’
ஈரோடு: டாஸ்மாக் கடைக்கு போய்ட்டு வர ப்ரீ பஸ் சர்வீஸ் வேண்டும் என்று குடிமகன் பண்ணிய அலப்பறை தான் ஈரோடு மாவட்டம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.
டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் நிர்க்கதியாக இருக்கின்றன. பூரண மதுவிலக்கு வேண்டும் என்று இன்னமும் மகளிர் அமைப்புகள், பெண்ணியவாதிகள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமரும் கட்சியிடம் கோரிக்கை வைத்தபடி தான் உள்ளன. ஆனால் எதுவும் பூரணமாக இதுவரை நடக்கவில்லை.
அதே நேரத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டும், டாஸ்மாக் போய்விட்டு வரும் போதும் குடிமகன்கள் பண்ணும் அலப்பறை எப்போதும் ஓவர்ரகம். அப்படித்தான் கோபிசெட்டிப்பாளையத்தில் குடிமகன் ஒருவர் பண்ணிய குசும்பு வேலை மாவட்டம் முழுவதும் பேச்சாக இருககிறது.
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்ல ஒரு பேருந்து தயாராக இருந்தது. உள்ளே ஏராளமான பயணிகள் அமர்ந்திருக்கின்றனர். பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மெதுவாக வேகத்தில் வெளியே நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அப்போது 2 குடிமகன்கள் எங்கிருந்தோ வர, அதன்பின்னர் தான் அலப்பறையே ஆரம்பித்து இருக்கிறது. அவர்களில் ஒரு குடிமகன் பேருந்தின் முன்பு மல்லாக்க படுத்துவிட்டார்.
மற்றொருவர் நேராக பஸ் டிரைவரிடம் ஓடி இருக்கிறார். ஏதோ இந்த சமூகத்துக்கு அவர் சொல்ல வருகிறார் என்று ஓட்டுநரும் ஆர்வமுடன் அவரை பார்க்க…. வந்த குடிமகன் கடும் வாக்குவாதத்தில் குதித்தார்.
அதை கண்ட கண்டக்டரும் என்ன ஏது என்று விசாரிக்க வந்திருக்கிறார்.
அவர்களிடம் பேசிய குடிமகன், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் இருப்பது போன்று எங்களுக்கு டாஸ்மாக் கடைக்கு இலவச அழைத்து செல்ல வேண்டும்.
கோபிசெட்டிபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நஞ்சகவுண்டன்பாளையம் டாஸ்மாக் கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை. அரசுக்கு வருமானம் தரும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
உடனே அவர்களை சமயோசிதமாக கையாண்ட கண்டக்டரோ, டைம் கீப்பிங் ஆபிசில் பேசி கொள்ளுங்கள் என்று கூறி நகர்ந்து சென்றுவிட்டார். குடிமகன்களின் இந்த அட்ராசிட்டி காமெடி தான் இப்போது இணையதளங்களில் ஹைலைட்டாகி இருக்கிறது.
எல்லாம் மது படுத்தும்பாடு வேறென்ன சொல்ல என்று அங்கிருக்கும் பொதுமக்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அனைத்தையும் பார்த்துவிட்டு சென்றனர்.