காய்ச்சல் இருக்கா..? திருச்சி ஜவுளிக்கடையில் ‘செக்’ பண்ணும் ‘ரோபோ’…!
திருச்சி: கொரோனா சுழற்றியடித்து வருவதால் திருச்சியில் உள்ள ஜவுளி கடையில் ரோபோவை பணிக்கு அமர்த்தி உள்ளனர் அதன் நிர்வாகத்தினர்.
தமிழகம் முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவக்குழுவினர் எந்நேரமும் பணியில் இருந்து முழுவீச்சில் இயங்கி வருகின்றனர்.
சென்னையில் பரவலாக இருந்த கொரோனா மற்ற மாவட்டங்களிலும் புகுந்து அதிரி, புதிரியாக்கி வருகிறது. இந் நிலையில் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை எடுத்துள்ள முயற்சி பாராட்டும்படி உள்ளது.
அந்த கடையில் ஜபிரா எனும் பெண் ரோபோ பணியில் சேர்ந்துள்ளார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை இந்த ரோபோ சோதிக்கிறது.
அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளனரா, எத்தனை பேர் கடைக்கு வந்து செல்கின்றனர் என்பதையும் இந்த ஜபிரா ரோபோ கண்காணிக்கிறது. இதை பார்த்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஜவுளிக்கடையின் இந்த செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.