ஆஜாகா… ஈஜாகா, ஊஜாகா…! பட்டைய கிளப்பிய திமுக
பாஜாகவை காய்ச்சி தள்ளும் தமிழக அரசியல் கட்சிகள் அதிகம். அதிலும் கொள்கையை முழக்கமாக கொண்டுள்ள ஆளும் திமுகவின் எதிர்ப்பு அரசியல் வேறு ரகம்.
லோக்சபா தேர்தல் 2024 என்ற இந்த காலத்தில் திமுகவின் பாஜக அரசியல் என்பது கடுமையாக பதிவாகி கொண்டு இருக்கிறது. போகிற இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு பாஜகவை காய்ச்சி எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செய்து வரும் நடவடிக்கைகளை திமுக மக்கள் மத்தியில் பட்டியலி போட்டு வாக்கு சேகரித்து வருகிறது. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் திமுகவின் பாஜக எதிர்ப்பு என்ற பிரச்சாரம் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது.
அதில் லேட்டஸ்ட்டாக தேர்தல் பிரச்சார காணொளி பாடலை திமுக வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் 2வது தேர்தல் பரப்புரை காணொளி பாடல் ஆகும். பாஜகவை இனி இப்படி வேறு எந்த கட்சியும் விமர்சிக்குமா? என்பதற்கு ஏற்ப அடித்து ஆடியிருக்கிறது திமுக.
பாஜகவை வேறு வேறு வகையான பெயர்களின் உச்சரித்து எழுதப்பட்டு உள்ள வார்த்தைகள் டாப் கிளாஸ் என்கின்றனர் அதை கேட்பவர்கள். செம தூள், அட்ரா சக்கை என்று ரிபீட் மோடில் புகுந்து விளையாடி இருக்கின்றனர் திமுகவினர்.
கிட்டத்தட்ட மூணரை நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் பாஜகவின் துரோகங்கள் தோலுரித்து காட்டப்பட்டு உள்ளன. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த காணொளி செய்தியின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.