இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
காஷ்மீரில் போர் நிறுத்தம், இந்த பிரச்னையை ஐநாவுக்கு கொண்டு சென்றது என முன்னாள் பிரதமர் நேரு பிழை செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜம்முகாஷ்மீர் பற்றி பேசும் போது இடம்பெற்ற பெரியார் பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு அவை மீண்டும் பெறும் வகையில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
2500 கோடி ரூபாய் மோசடியில், ஆரூத்ரா நிதி நிறுவனத்தின் நிர்வாகியான நடிகர் ஆர்கே சுரேஷ் இன்று காவல்துறை விசாரணைக்காக ஆஜராகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று. இதையடுத்து உலகம் எங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடி உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
வேளாண் பாதிப்புகளுக்கு ஏற்ப உரிய நிவாரண தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சலுகை பயணச்சீட்டு அட்டையை பெற கல்லூரி மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
570வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
2வது டி 20 கிரிக்கெட் போட்டி, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கெபேஹா நகரில் இன்று நடக்கிறது. முதல் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.