Sunday, May 04 11:51 am

Breaking News

Trending News :

no image

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது போடுவது..? மத்திய அரசு சூப்பர் தகவல்


டெல்லி: ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை சற்றே ஓய்ந்திருக்கிறது. விரைவில் 3வது அலை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதாக எய்ம்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 3வது அலை குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களில் தொடங்கி உள்ளன.

கிட்டத்தட்ட 44 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து தெளிவான வரையறை இல்லாத நிலை தான் உள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமானது குழந்தைகள், சிறுவர்கள் மீது தடுப்பூசி பரிசோதனை செய்து வருகிறது. சைடஸ் கேடில்லா மருந்து தயாரிப்பு நிறுவனம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் என்று கூறி உள்ளார். இது குறித்து பேசிய மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகஸ்ட் மாதம் குழந்தைகள், சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று எய்ம்ஸ் கூறி இருந்தது, குறிப்பிடத்தக்கது.

Most Popular