Sunday, May 04 11:46 am

Breaking News

Trending News :

no image

கொரோனா நோயாளிகள் இனி பயம் வேண்டாம்…! உயிர் காக்க தொடங்கியது ஸ்டெர்லைட்..!


தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை மின்னல் வேகத்தில் உள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. மருத்துவமனையில் வாசலில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஆம்புலன்சிஸ் நோயாளிகள் படுக்கைக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியே படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 4 நோயாளிகள் இன்று உயிரிழந்துள்ளனர். தொடரும் பாதிப்புகள், உயிர்பலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி உள்ளது.

அதன் ஒருபகுதியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது- இப்போது அந்த ஆலையில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. உற்பத்தியான ஆக்சிஜன் வினியோகிக்கும் பணியும் தொடங்கியது. முதல்கட்டமாக நெல்லை மருத்துவமனைக்கு 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கண்காணிப்பு குழு தலைவரும், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் முதல்கட்டமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்சிஜன் நிரப்பிய லாரி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு உள்ளது. அடுத்து சில நாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று கூறினார்.

Most Popular