மோடியோட DADDY… அப்புறம் ED….! மொத்தமாக சம்பவம் செய்த உதயநிதி
யாரை அனுப்புனாலும் சரி, யாரு வந்தாலும் சரி, அது மோடியோட டாடியா இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்று முழங்கி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகத்தில் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. மற்ற கட்சிகளை விட, பிரச்சாரத்தில் ஒரு படி முன்னணியில் இருக்கிறது திமுக. போகும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமாக நிரம்பி வழிய, கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது.
ஸ்டாலினை போன்று, உதயநிதியும் பிரச்சாரத்தில் பாஜகவையும், மத்திய அரசையும் கிழித்து தொங்கவிட்டு வருகிறார். அண்மையில் பிரச்சாரத்தில் அவர் பேசியது தான் ஹைலைட். பிரதமரையும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளையும் விமர்சித்து அசத்தி இருக்கிறார்.
அவர் பேசியது; முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ரெய்டு என்று மத்திய அரசு செய்து உள்ளது. அதிமுகவுக்கு பண்ணியது போல திமுகவுக்கும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாங்க, திமுக இதுக்கெல்லாம் பயப்படுமா?
மோடிக்கும் பயப்பட மாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம், மோடியோட daddy வந்தாலும் நாங்க பயப்பட மாட்டோம். எங்களுக்கு பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சுயமரியாதையை கத்து கொடுத்துருக்காங்க என்று பேசி உள்ளார்.
தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அந்த வீடியோ இங்கே கீழே இணைக்கப்பட்டு உள்ளது.