கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி..? இப்படி செய்யுங்க
டெல்லி: கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப் மூலம் பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவாஷீல்டு தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி கொண்டு வருகின்றனர்.
சில தனியார் மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்கள் போட்டு கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கோவின் வலைதளம் மூலம் கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோவின் இணையதளத்தில் நுழைந்து, செல்போன் எண்ணை டைப் செய்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைக்கும்.
இப்படி சென்று கொரோனா சான்றிதழை செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந் நிலையில் வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் 90131 51515 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த எண்ணில் கோவிட் சர்டிபிகேட் என அனுப்பினால், எந்த செல்போனில் இருந்து அனுப்புகிறோமோ அதே எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும்.
அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்டவரின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த முறை எளிதாக இருக்கும் என்பதால் தற்போது உள்ள நடைமுறை சிக்கல்கள் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.