அண்ணா பல்கலை. மாணவரா..? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு… இதோ..!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் 3 மணி நேரம் தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம். தேர்வு கட்டணம் கிடையாது. ஏற்கனவே பாஸான மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் வேண்டும் என்றால் தேர்வில் பங்கேற்கலாம்.
எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனரோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். எப்போது தேர்வு என்பது குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.