திமுகவுக்கு செக் .. வெளியானது 17 பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..! குஷ்புக்கு என்ன தொகுதி?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது.
அதன்படி அக்கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் தாராபுரத்தில் போட்டியிடுகிறார். காரைக்குடியில் ஹெச் ராஜா, நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
திட்டக்குடியில் பெரிசாமி, திருவையாறு தொகுதியில் பூண்டி எஸ் வெங்கடேசன், துறைமுகம் தொகுதியில் வினோஜ் பி செல்வம் ஆகியோரும், விருதுநகருக்கு பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதிக்கு குப்புராமு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன், திருவண்ணாமலையில் தணிகை வேல், குளச்சலில் ரமேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன், மொடக்குறிச்சியில் சிகே சரஸ்வதி, திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.