இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
* திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று 5வது ஆண்டு தொடங்குகிறது. அதை முன்னிட்டு மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*குஜராத் புஜ் பகுதியில் பல்வேறு நல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மக்களின் உணர்வை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்மிருதி என வன நினைவிடத்தை அவர் தொடங்கி வைத்தார்.
*காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் வெள்ள நீர் முழுதும வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது.
*கச்சத்தீவு நெடுந்தீவு கிடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசை வியாகுலம், ஜேசு ஆகிய தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
*வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு காரைக்கால்-தஞ்சை ரயில் செப்டம்பர் 8ம் தேதி வரை திருச்சிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
* மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் கார் 7.3 லட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனை ஆனது. பிரபலமானவர்கள் வைத்திருக்கும் கார்களை சேகரித்து வைத்துள்ள ஆல்டா்லே எட்ஜ் என்ற நிறுவனம் டயானாவின் இந்த காரை வைத்திருந்தது.
* தமது காதலருடன் விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றுள்ள நடிகை பிரியா பவானிசங்கர் சாகச வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அவர் 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலிக்கிறார், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
*ஜெயிலர் படப்பிடிப்பில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் லீக் ஆகி உள்ளது. படத்தில் காக்கி கலர் பேண்ட், கசங்கிய சட்டையில் காணப்படுகிறார்.
* இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 100வது சர்வதேச T 20 போட்டியில் விளையாடுகிறார். 2019ம் ஆண்டு முதல் அதிரடியாக விளையாடுவதை அவர் நிறுத்திவிட்டதாக விமர்சனங்கள் எழுந்து வந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.