திமுகவுக்கு செக் வைக்கிறாரா வைகோ..? சின்னம் விவகாரத்தில் திடீர் சினம்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் கட்சி தலைமையகமான தாயகத்தில், வைகோ தலைமையில் சூளுரை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது:
மத்திய அரசானது மாநில மொழிகளை, தனித்தன்மையை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்.
வரும் சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும். திமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. வரும் தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும் என்று தெரிவித்தார்.