என்ன வாழ்க்கை…! அமைதி தேடி ஆசிரமம் போன பிரபல தமிழ் நடிகர்..!
புதுச்சேரி: கொரோனா மரணங்கள் மன வேதனையை தந்ததால் நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரியில் உள்ள ஆசிரமத்தில் நேரத்தை செலவிட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு இப்போது போதாத காலம். கொரோனா என்னும் கொடிய அரக்கன் பல்வேறு கலைஞர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. பல ஜாம்பவான்கள் கொரோனாவின் கோர பிடியால் உயிர் இழந்து வருவது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திரையுலகில் ஏற்பட்ட கொரோனா மரணங்களினால் மனம் உடைந்து புதுச்சேரியில் உள்ள ஆரோவில் ஆசிரமத்துக்கு சென்று வந்திருக்கிறார். இயக்குநர் ஜனநாதன் மறைவால் படு அப்செட்டாக இருந்து, அமைதியை தேடி அவர் சென்று வந்த விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.
இது தவிர தாடி, மீசையுமாக காட்சி அளிக்கும் விஜய் சேதுபதி தமது தோட்டத்தில் மாங்காய் பறித்து வீசும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது. படு ஜாலியாக மாங்காய் பறித்து வீசியதை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.