வலிமை பட ரிலீஸ்…? புதிய தகவலால் தல ரசிகர்கள் ஹேப்பி….!
அஜித்தின் வலிமை படம், வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.
ஹெச் வினோத் டைரக்ஷனில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் ஒரு போலீஸ் அதிகாரி. ஆகையால் படத்தின் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமில்லை.
படத்தின் 90% படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இன்னமும் ஒரேயொரு பைக் சண்டை காட்சி மட்டும் தான் படம்பிடிக்க வேண்டும். ஸ்பெயினில் உள்ள சண்டைகாட்சி நிபுணர்கள் மூலம் ஷூட்டிங் செய்ய இயக்குநர் வினோத் திட்டமிட்டு உள்ளார்.
ஆனால் கொரோனா காரணமாக படக்குழு ஸ்பெயினுக்கு செல்ல முடியாமல் உள்ளது. நாட்கள் நகர, நகர படத்தின் மற்ற வேலைகளை இயக்குநர் வினோத் முடித்துவிட்டார்.
வலிமை படத்தை ஆகஸ்டில் கொண்டு வர முன்னர் படக்குழு முடிவு செய்தது. ஆனால் இப்போதைக்கு அது முடியாது என்பதால் பட ரிலீஸ் நவம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபாவளிக்கு படம் வரலாம் என்பதை அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்து இருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்த தீபாவளி வலிமை தீபாவளி தான்… சந்தேகமே இல்லை என்று ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து உள்ளனர்.