ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி…! சம்பவம் WAITING
சென்னை: சென்னை வெள்ள பாதிப்பில் நேரடியாக சென்று களஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலினை போல, அமைச்சர் உதயநிதி தூத்துக்குடிக்கு புறப்படுகிறார்.
சென்னையை கொத்து பரோட்டாவாக்கிய பருவமழை இப்போது தென் மாவட்டங்களை உலுக்கி எடுத்து வருகிறது. 2 நாட்களாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என மழை மக்களை புரட்டி எடுக்கிறது.
எங்கு பார்த்தாலும் இடுப்பளவு தண்ணீர், சாலைகள், பேருந்து நிலையம், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் மூழ்கி எது என்ன என்று தெரியாத நிலை தான் உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி களத்தில் இறங்கி ஆய்வு மற்றும் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.
நிவாரண முகாம்கள், மருத்துவ உதவி, உணவு என அதிகாரிகள் சுற்றி கொண்டிருக்க, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை முதலமைச்சர் ஸ்டாலின் முடுக்கிவிட்டு உள்ளார். அனைவருக்குமான தலைமை பொறுப்பில் முதலமைச்சரான அவர் சென்னை போன்று தென்தமிழகம் சென்று மீட்பு பணிகளை முடுக்கி விடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
எப்போதும் போல, எதிர்க்கட்சிகளினால் இந்த கேள்வி விமர்சனமாக்கி, மீம்ஸ் வரை இவ்விவகாரம் இழுத்துக் கொண்டு போயிருக்கிறது. இந்த நிலையில், கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் களப்பணி ஒன்றிலே தான் கவனம் என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென் தமிழகம் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
களத்துக்கு நேரிடையாக சென்று அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் விவரங்கள் கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட உள்ளார் என்றும் தெரிகிறது. எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியுமோ? அவ்வளவு வேகமாக செல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்வது என்பது முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் தென் தமிழகம் விரைந்துள்ளார், எதிர்க்கட்சிகள் மழை, வெள்ளம் போன்ற பிரச்னைகளை முன் வைத்து விமர்சித்தாலும் மக்கள் பணியே முக்கியம் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் திடமாக உள்ளனர், அதை தான் இனி தென்தமிழகத்தில் பார்க்க போகின்றனர் என்று கூறுகின்றனர் விவரமறிந்த திமுக முக்கிய தலைவர்கள்…!
சென்கை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முக்கியமல்ல.. அது அப்புறம்… முதலில் மக்களுக்கு தேவையானது செய்ய வந்திருக்கிறோம்.. அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலின் பொட்டில் அடித்தாற்போல் கூறியது குறிப்பிடத்தக்கது…!