Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

#ParliamentAttack…! LIVE செய்திக்காக அடித்துக் கொண்ட வடக்கன்ஸ் ஊடகங்கள்


டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க, செய்திக்காக பிரபல தொலைக்காட்சி நிருபர்கள் நடந்து கொண்ட விதம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

மீண்டும் ஒரு சம்பவம் இப்படி நடக்காது என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்க இன்று அப்படி நடந்தேவிட்டது. வழக்கம் போல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது, உள்ளே வளாகத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென எம்பிக்கள் இருக்குமிடத்தில் தொபுக்கென்று குதித்தனர்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை வெளியிடும் பட்டாசு வகை பொருட்களை வீச அங்கே களேபரமானது. அவர்கள் 2 பேரையும் அங்கிருந்த எம்பிக்களும், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் மடக்கி பிடிக்க, அடுத்த நொடி நாடே பரபரப்பானது.

நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல், உள்ளே புகை குண்டுவீச்சு என அந்த கணமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிக்கிக் கொண்ட 2 பேர்களின் பெயர்கள் மனோரஞ்சன், சாகர் சர்மா என விசாரணையில் தெரிந்தது.

என்ன நடக்கிறது என்று உலகுக்கு சொல்ல வேண்டிய ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் இப்போது செய்தியாளர்கள் மத்தியில் பெரிய பேச்சாக மாறி இருக்கிறது.

பொதுவாக வட நாட்டு தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி வெளியீடு என்பதே தனி ரகம். வழக்கமான செய்தியாக இல்லாமல், அதிகம் பேரை ஈர்க்கும் வகையில் செய்திகளை ஒன்று சேர்த்து கலவையாக தருவதில் வல்லமை கொண்டவர்கள்.

யார் செய்தியை முந்தி தருவது? என்ன பேட்டியில் சொல்வது? செய்தியில் புதிய தகவல், புதிய கோணம் என்ன என்பதை அட்ரா சக்க பாணியில் அள்ளி தெளித்துவிடுவார்கள்.

ஆனால் இந்த சம்பவத்தில் நடந்ததோ என்னவோ வேறு வடிவத்தில் இருந்தது. பரபரப்பில் மிகவும் உச்சமான செய்தி என்பதால் கைகளில் மைக்குகளுடன் வலம் வந்த செய்தியாளர்கள் live ஆக தொகுத்து வழங்க எத்தனித்தனர்.

நாடாளுமன்றத்தின் உள்ளே  அத்துமீறியவர்கள் வீசிய உமிழும் தன்மை வண்ண புகையை வெளியிடும் அந்த பொருள் அவர்கள் கைகளில் கிடைத்தது. அவ்வளவுதான்… ஆளாளுக்கு அதை வைத்துக் கொண்டு அங்கே நடந்தது என்ன என்றால்… என கதைக்க ஆரம்பித்தனர்.

ஒருவர் ஒரு கையில் மைக், மறுகையில் அந்த பொருள் என நடமாட…. அதை பார்த்த மற்றொரு ஊடக அன்பர்… பறித்துவிட்டு கேமரா முன்பு பேச ஆரம்பித்தார். இதோ… நான் கையில் வைத்திருக்கும் இந்த பொருள் தான் என்று தொடங்க… எங்கிருந்தோ வந்த மற்றொரு செய்தியாளர் அதை பிடுங்கி பேச எத்தனித்தார்.

அவரை தொடர்ந்து வேறு ஒரு ஊடக அன்பர் அதை அபகரிக்க… இப்படியே ஆளாளுக்கு மாறி, மாறி அந்த பொருளுடன் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  ஆங்காங்கே தள்ளுமுள்ளு, கோப பேச்சு என அந்த இடமே ரணகளமாக… இதை வேறு சிலர் படம்பிடித்து வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த வீடியோ இணையத்தில் பிரபலமாகிவிட, நேர்மையான ஊடகவியலாளர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக இருந்திருக்கின்றனர். செய்தி முக்கியம் தான், அதற்காக இப்படித்தான் சின்ன பிள்ளைத்தனமாக அடித்துக் கொண்டு… மானம் போகுது என்று அலுத்துக் கொண்டே அக்கட இருந்து அகன்று சென்றனர்….!

அந்த அடித்துக் கொண்ட வீடியோ இதே செய்தியின் கீழ் இப்போது தரப்பட்டு உள்ளது: 

Most Popular