Sunday, May 04 11:52 am

Breaking News

Trending News :

no image

தாமரை தடுமாறுதா…? 2024 தேர்தல் OPINION POLL… ‘திக் திக்’ ரிசல்ட்


2024ம் ஆண்டு லோக் சபா தேர்தல் பற்றிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி அரசியல் கட்சிகளை திகைக்க வைத்துள்ளது.

இன்னும் சில மாதங்களே உள்ளன, வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு… 2 முறை ஆட்சிக் கட்டிலில் தொக்காய் அமர்ந்திருக்கும் பாஜக தலைமையிலான அரசு இம்முறையும் தொடருமா? அல்லது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

ஆனால் அதற்கு முன்பே தற்போதுள்ள அரசியல் சூழலில் டிரெண்ட் எப்படி இருக்கும் என ஒரு கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது. ஏபிபி, சி வோட்டர்(ABP- C VOTER) இணைந்து நடத்தி வெளியிட்டு உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய இந்த கணிப்பில் வட இந்தியாவில் பாஜக மீண்டும் மலரும், தென் இந்தியாவில் கருகும் என்ற மனநிலையிலேயே மக்கள் மனோபாவம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்த சர்வே முடிவில் கூறப்பட்டு உள்ள விவரம்;

2 கட்டங்களாக வெளியிடப்பட உள்ள இந்த ரிசல்ட்டில் முதலில் 10 மாநிலங்களில் உத்தேசமாக கிடைக்கும் இடங்கள் எவ்வளவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட இந்தியாவில் பாஜக, அதன் கூட்டணிக்கு மக்கள் ஆதரவும், தென் இந்தியாவில் காங்கிரஸ், அதன் கூட்டணிகளும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

மாநிலங்கள் வாரியாக சர்வே முடிவுகள்:

மத்திய பிரதேசம்- 29 தொகுதிகள்

பாஜக: 27-29

காங்:0 -2

---

ராஜஸ்தான் – 25 தொகுதிகள்

பாஜக: 23-25   

காங்: 0-2

---

சத்தீஸ்கர்  - 11 தொகுதிகள்

பாஜக: 9-11

காங்: 0-2

----

கர்நாடகா  - 28 தொகுதிகள்

பாஜக: 22-24

காங்:  4-6

---- 

தெலுங்கானா – 17 தொகுதிகள்

பாஜக: 1-3

காங்: 9-1

டிஆர்எஸ் கட்சி: 3-5

மேற்கண்ட மாநிலங்களில் மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகள் 110. அதில் பாஜக 83 முதல் 85 தொகுதிகளை அள்ளும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதுதவிர மொத்தமாக 223 தொகுதிகளை உள்ளடக்கிய முக்கிய மாநிலங்களின் கணிப்பும் சற்றே புருவங்களை உயர்த்த வைக்கிறது. பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு 125 தொகுதிகள் முதல் 130 இடங்களை வரை கிடைக்கும்.

குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 75 தொகுதிகள் வரை வெற்றி பெறும். ஆம் ஆத்மி வலுவாக உள்ள பஞ்சாபில் காங்கிரஸ் 5 முதல் 7, ஆம் ஆத்மி 4 முதல் 6, பாஜக 0 முதல் 2 தொகுதிகள் வரை வெல்லும்.

48 தொகுதிகள் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 26 முதல் 28, பாஜக கூட்டணிக்கு 19 முதல் 21 தொகுதிகள் வசப்படுத்தும். மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் திரிணமூல் காங். 25 தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம்.

பீகாரில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகள் பாஜக கூட்டணி 18 வரை வெல்லும். அதாவது 10 மாநிலங்களில் 333 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 210 இடங்கள் கிடைக்கும்.

அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 90 இடங்கள் தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிஷா, அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்றால் கிடைக்கும். ஆனால் இந்த மாநிலங்களில் தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் தாமரை மலராது என்றும், குஜராத், அசாமில் வெல்லும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வட இந்தியாவில் பாஜக வென்றாலும் தென் இந்தியாவில் கிடைக்கும் தொகுதிகளே கூட்டணியின் வெற்றி கணக்கை 400 என்பதை தாண்ட உதவும். ஆனால், அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் 350 அதிகபட்சம் 400 தொகுதிகளை கடக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது.

2024ம் ஆண்டு அரியணை என்பதை ஜம்போ victory ஆக அதாவது 400 என்ற மேஜிக் நம்பராக மாற்ற வேண்டும். அதற்கு பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நிர்ணயம் செய்தால் மட்டுமே முடியும்.

முதல் கட்ட கணிப்பு மற்றும் அதன் முடிவுகளில் தெரிய வந்துள்ள விவரங்கள் இவை. 2ம் கட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும். எது எப்படி என்றாலும், ஹாட்ரிக் வெற்றிக்காக பாஜக எந்த பிரம்மாஸ்த்திரத்தையும் எடுக்க துணியும் என்பதால் அதன் வெற்றி காங். கூட்டணி கைகளில் தான் உள்ளது….! காரணம் நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்….!

Most Popular