Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

கலைமாமணி விருது வாங்கிய பிரபல நடிகர் திடீர் மரணம்…!


சென்னை: பிரபல நடிகரும், கலைமாமணி விருது பெற்றவருமான அமரசிகாமணி திடீரென காலமானார். அவருக்கு வயது 74.

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர். கொரோனா, வயோதிகம் என பல காரணங்களினால் அவர்கள் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந் நிலையில், பிரபல நடிகரும், கலைமாமணி விருது பெற்றவருமான அமர சிகாமணி காலமாகி உள்ளார். அவருக்கு வயது 74. இவர் நடிகர் மட்டுமல்ல… ஒரு சிறந்த கவிஞராகவும் அறியப்பட்டவர்.

சினிமா மட்டுமல்லாது, சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். 74 வயதான அவருக்கு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார்.

அமரசிகாமணி அமரரானதை அறிந்த சினிமாத்துறையினர், சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Most Popular