Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

56ல் இருந்து 67...! நீக்கம், நியமனம்..! அதிமுகவில் அதிரடி காட்டிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்


சென்னை: 11 அமைப்புச் செயலாளர்களை நியமனம் செய்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக அமைப்புச் செயலாளர்கள் விவரம்:  கருப்பசாமி, சிவகாமி,இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், திருச்சி ரத்தினவேல், திண்டுக்கல் மருதுராஜ், தென்காசி ராஜேந்திரன்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா.

 மேலும், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

56 ஆக இருந்த அமைப்பு ரீதியான மாவட்டங்கள் இப்போது 67 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் - கே.சி.வீரமணி, விழுப்புரம் - சி.வி. சண்முகம், காஞ்சிபுரம் - சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு - சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய திருவள்ளூர் - அமைச்சர் பெஞ்சமின் ராணிப்பேட்டை - எம்.எல்.ஏ ரவி.

கோவை புறநகர்(தெற்கு) - எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகர் - அம்மன் அர்ஜூனன் திருச்சி புறநர்- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன் என மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Most Popular