நித்தியானந்தா இருக்கும் இடம் இதுதான்…? சீடர்கள் சொல்லும் விஷயம்
சாமியார் நித்தியானந்தா எங்கு உள்ளார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற சில விவரங்கள் அவரது சீடர்கள் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டுகள், கடத்தல் என அடுத்தடுத்த புகார்களில் சிக்கி வருபவர் நித்தியானந்தா. தொடர்ந்து ஒரு பக்கம் வழக்குகள் வந்து கொண்டே இருக்க அவரோ எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாத நிலை உள்ளது.
நேற்றைய தினம் சாமியார் நித்தியானந்தாவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று சொல்லலாம். பெண் சீடருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை கர்நாடகாவில் உள்ள ராமநகரா மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. வழக்கில் விசாரணை அடுத்த மாதம் 23ம் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை அவரது சீடர்கள் கசியவிட்டு உ ள்ளதாக ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது தலைமறைவாகி உள்ள நித்தியானந்தா, பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் வசித்து வருகிறாராம். அவர் மீதான வழக்குகளில் ஜாமின் கொடுத்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் அனைவரும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்களாம் என்று கூறுகின்றனர் சீடர்கள்.
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்பதை நம்ப முடியாது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் அவரை தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது தான் நிஜம்.