ஒற்றை வார்த்தை…! அமித்ஷாவை சூடேற்றிய பிடிஆர்….! பலே திமுக
சென்னை: ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறாததால் டெல்லி பாஜக கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் எழுந்துள்ளன.
கடந்த 21ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஆர் ஈஸ்வரன் ஒரு விஷயத்தை தெரிவித்தார். கடந்த முறை ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இருந்தது. இந்த முறை அந்த வார்த்தை இல்லை என்று கூறி இருந்தார்.
ஈஸ்வரன் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து அதிருப்தி பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் எப்படி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை மிஸ்சானது என்பது குறித்து மத்திய உளவுத்துறை ரகசிய அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள சில விஷயங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறதாம். அதாவது ஆளுநர் உரையில் முதலில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.
ஆனால், நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனோ அந்த வார்த்தையை நீக்கிவிட்டு முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளாராம். இப்படியாக அந்த ரகசிய அறிக்கையில் இருக்க… முழு விவரங்களை கண்டு அமித் ஷா கொதித்து போய்விட்டதாக தெரிகிறது.
ஜெய்ஹிந்த் வார்த்தை நீக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக தலைமை ஒரு முக்கிய விவரத்தை தமிழக பாஜக எம்எல்ஏக்களுக்கு சில உத்தரவுகளை போட்டுள்ளதாம். விரைவில் அந்த உத்தரவுகள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.